- Posted on
- admin
- No Comments
விழுதுகளின் அழைப்பை ஏற்று வந்த வேர்களே வணக்கம்.
இது நன்றிக்கடிதமல்ல.
மகிழ்சியின் நெகிழ்ச்சியின் எழுத்து வடிவம்.
நேற்று நான் பழைய பள்ளிக்கூடத்தை பார்த்தேன்.கட்டமைப்பில் வடிவமைப்பில் பள்ளியைப் புதுப்பிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டாலும் கடமையுணர்வில் கட்டுப்பாட்டில் இது பழைய பள்ளிக்கூடமாகவே இருக்க வேண்டும் என்பதை நான் மீண்டும் உணர்ந்தேன்.உங்கள் முகங்களில் சுருக்கம் இருந்தது உங்கள் மனசு நேர்த்தியாகவே இருக்கிறது . உங்கள் நடை தளர்ந்து போயிருக்கிறது உங்கள் நல் ஆலோசனைகள் நிமிர்ந்தே இருக்கிறது.உங்கள் குரலில் செயலில் வேகம் குறைந்திருக்கலாம் உங்கள் அன்பும் அக்கறையும் இன்னும் தீவிரமாகவே இருக்கிறது உங்களை வழியனுப்பி விட்டு அடைக்கல நாதர் ஆலயபீடத்தில் போய் இப்படி ஜெபித்தேன் இறைவா இங்கே வந்து போன அனைவருக்கும் வளமான ஆரோக்கியத்தைக் கொடு இவர் ஏந்திக்கொண்டு வந்து கொடுத்தக் கல்வி ஜோதியை ஒழுங்காக எடுத்துக்கொண்டு ஓட எங்களுக்கும் பலத்தைக்கொடு”
என் அன்பிற்குரிய இ.எல்.எம் பள்ளியின் நேற்றைய சரித்திரங்களே
நாங்களும் வருங்காலத்தில் வரலாறு படைக்க
உங்கள் மனதில் எங்களை நினைத்துக்கொள்ளுங்கள் உங்கள் மன்றாட்டில் பள்ளிக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள்
அன்புடன்
உங்கள் வழித்தோன்றல்
அருள்பிரகாஷ்.