ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்:
மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை “ஊழலற்ற இந்தியா- வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.